Latestமலேசியா

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உடல் பாகங்களை இழந்த இளைஞருக்கு RM7.4 மில்லியன் இழப்பீடு

கோலாலம்பூர், நவம்பர்-3,

மருத்துவ அலட்சியம் தொடர்பில், ஓர் அரசாங்க மருத்துவமனை மற்றும் அதன் மருத்துவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கோலாலாம்பூர் உயர் நீதிமன்றம் கே. விமல் ராஜ் எனும் இளைஞருக்கு RM7.4 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

அதில் RM6.4 மில்லியன், அவருக்காக ஒரு ரோபோடிக் கை மற்றும் இரண்டு ரோபோடிக் கால்கள் வாங்குவதற்காக வழங்கப்பட்டது.

மேலும், RM213,000 வலி மற்றும் துன்பத்திற்கும், RM180,000 வீட்டு பராமரிப்புக்கும், RM20,000 கடுமையான இழப்பீடாகவும் வழங்கப்பட்டது.

வழக்கின் சட்டச் செலவுகளுக்காக RM200,000 வழங்கப்பட்டது.

என்ற போதிலும், விமல் ராஜின் தந்தை ஜே. கிருஷ்ணசாமி தாக்கல் செய்த வருமான இழப்பு கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது; தக்க ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி நீதிபதி அதனை நிராகரித்தார்.

அரசாங்கம் முன்பே பொறுப்பை ஏற்றுக் கொண்டதால், இழப்பீடு மதிப்பீட்டுகளுக்குப் பிறகு, இத்தீர்ப்பு வெளியாகியுள்ளனது.

இவ்வழக்கில் விமல் மற்றும் கிருஷ்ணசாமி தரப்பில் 11 நிபுணர்கள் சாட்சியமளித்த வேளை, அரசுத் தரப்பில் 4 பேர் மட்டுமே சாட்சியமளித்தனர்.

மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக, 2019-ஆம் ஆண்டு நடந்த பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு விமல் தனது இடது கை, வலது கால் மற்றும் இடது பாதத்தின் சில பாகங்களை இழந்ததாகக் கூறி 2020-ல் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!