
கோலாலம்பூர், செப்டம்பர் 25 –
அரசு பல்கலைக்கழகத்தில் பயிலும் 24 வயது மாணவர், சமூக வலைத்தளத்தில் அருவருக்கத்தக்க காணொளி ஒன்றை பதிவேற்றிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இன்று நீதிமன்றம் அம்மாணவனுக்கு 10,000 ரிங்கிட் அபராதத்தை விதித்தது.
இந்நிலையில் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்திய பின்னர் அம்மாணவன் விடிவிக்கப்பட்டான்.
கடந்தாண்டு, ஷா அலாமிலுள்ள தனது இல்லத்தில் இருந்து, பிறரை வருத்தும் நோக்கில் அருவருக்கத்தக்க வீடியோவை உருவாக்கி பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
முன்னதாக தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்த இக்குற்றம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னர் அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் அபராதமும் ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வாறான உள்ளடக்கங்கள் கவனிக்கப்படாமல் விட்டால், எதிர்கால தலைமுறையின் நெறி, ஒழுக்க வலிமை, கவனக்குறை ஆகியவை சீர்குலையும் என்று எச்சரிக்கப்பட்டது.