
லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூலை 17 – நேற்று, அலாஸ்கா கடல் பகுதியில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் தண்ணீரில் இருந்து வெளியேறவும், கரை பகுதி, துறைமுகங்கள், மற்றும் விரிகுடா பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.
சுமார் இரண்டு மணி நேர நிலநடுக்கத்திற்குப் பிறகு, முன்னர் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையை அதிகாரிகள் முற்றிலும் ரத்து செய்தனர்.
இதே போல கடந்த ஜூலை 2023 இல் அலாஸ்கா தீபகற்பத்தில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் தொடர்ந்து பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அறியப்படுகின்றது.