Latestமலேசியா

அலோர் ஸ்டாரில் படுகொலை: இறந்தவரின் மகனை தேடும் போலீஸ்

அலோர் ஸ்டார், பிப்ரவரி-3-கெடா, அலோர் ஸ்டாரில் வங்கி அதிகாரியான 52 வயது மாது கத்திக் குத்து காயங்களுடன் இறந்துகிடந்தார்.

Taman Sultan Abdul Halim பகுதியில் உள்ள வீட்டின் படுக்கையறையில் 3 கத்திக் குத்துகளுடன் அவரின் சடலம் மீட்கப்பட்டது.

நேற்று காலை 5 முதல் 8 மணிக்குள் அக்கொலை நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

10 முதல் 18 வயதிலான 3 பிள்ளைகளுடன் அவர் வீட்டில் இருந்துள்ளார்.

வெளியில் தங்கும் 29 வயது மூத்த மகன் காலையில் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டிய நிலையில், மற்ற பிள்ளைகள் கதவைத் திறந்து விட்டு மீண்டும் படுக்கச் சென்று விட்டனர்.

பின்னர் எழுந்துபார்த்த போது தாயின் அசைவற்ற உடலைக் கண்டு அதிர்ந்துபோய் மற்ற பிள்ளைகள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

அம்மாதுவின் நகைகள், பணம், கைபேசி கொண்ட கைப்பை காணாமல் போயுள்ளது.

இந்நிலையில் வீட்டுக்கு வந்த அவர்களின் அண்ணனையும் திடீரென காணவில்லை.

இதையடுத்து அவ்வாடவருக்கு போலீஸ் வலைவீசியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!