
அலோர் ஸ்டார், மே 7- அலோர் ஸ்டார் கெரியாங் மலையில், மலையேறும் நடவடிக்கையை மேற்கொண்ட ஆடவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து, முதலில் அந்நபர் காணாமல் போனதாகதான் போலீசில் புகார் செய்யப்பட்டிருக்கிறது.
இதனிடையே,சுமார் 2 மணி நேர மீட்பு பணி தேடலுக்குப் பிறகு அவரின் உடலை, தீயணைப்பு துறையினரால் அடையாளம் கண்ட நிலையில் சம்பவ இடத்திலேயே, அவர் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.