
கோலாலாம்பூர், மார்ச்-2-இஸ்லாமியர்களின் புனித நூலான அல் குர்ஆனை அவமதித்த மற்றொரு சம்பவம் வைரலாகியுள்ளது.
டிக் டோக்கில் பதிவான வீடியோவில், ஓர் ஆடவர் குர்ஆனை மிதிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.
அந்த வீடியோ பின்னர் நீக்கப்பட்டாலும், அதற்கு முன்பே பதிவிறக்கம் செய்யப்பட்டு பல தளங்களில் பரவியுள்ளது.
இதனால் பொது மக்கள் குறிப்பாக முஸ்லீம்கள் கடும் சினமடைந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட டிக் டோக் கணக்குகள் பல பெயர்களிலும், ஒரே மாதிரியான புகைப்படங்களுடனும் இயங்குவதும் கண்டறியப்பட்டது.
இதனிடையே, குர்ஆனை மிதித்ததாகக் கூறி ஏற்கனவே கைதான 21 வயது பல்கலைக் கழக மாணவருக்கான தடுப்புக் காவல் நாளை முடிவடைகிறது.
இந்நிலையில், விசாரணை அறிக்கை KUJAKA எனப்படும் குற்றச்செயல் மற்றும் பொது அமைதித் துறையின் மேல்நடவடிக்கைக்காக அனுப்பப்படுவதாக குவாந்தான் போலீஸ் கூறியது.
விரைவிலேயே அம்மாணவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



