
செராஸ் – ஆகஸ்ட்-5 – ஜாலான் மக்கோத்தா செராஸில் சாலையின் எதிர்திசையில் வாகனமோட்டிச் சென்ற 23 ஓட்டுநர்களுக்கு அபராத நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
பொது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ நேற்று நடத்திய சோதனையில் அவர்கள் சிக்கினர்.
காலை 6 மணி தொடங்கி 3 மணி நேரங்களுக்கு நடைபெற்ற அச்சோதனையில் 54 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன; அவற்றில் எதிர்திசையில் ஓட்டியதற்காக 23 ஓட்டுநர்களுக்கும், காலாவதியான வாகனமோட்டும் உரிமத்தை வைத்திருந்த குற்றத்திற்காக 2 ஓட்டுநர்களுக்கும், வாகன காப்பீட்டு வைத்திராத 2 வாகனமோட்டிகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டன.
முன்னதாக, சாலையொன்றின் எதிர்திசையில் ஏராளமான வாகனங்கள் நின்றதால் வாகனமோட்டி ஒருவர் ஹாரன் சத்தம் எழுப்பிய 54 வினாடி வீடியோ வைரலானது.
சம்பந்தப்பட வாகனமோட்டிகளின் பொறுப்பற்றச் செயலால் அப்பாதையில் நெரிசல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. JPJ கேட்டதற்கு, அவசரமாகச் செல்ல வேண்டியிருந்ததால் எதிர் திசையில் போனதாக அவர்கள் காரணம் கூறினர்.