Latestமலேசியா

ஆகஸ்ட் 8-ல் புக்கிட் ஜாலிலில் 2025 சமூகமுனைவோர் உச்சநிலை மாநாடு; டிக்கெட்டுகளுக்கு இன்றே முந்துங்கள்

கோலாலாம்பூர், ஆகஸ்ட்-1- இந்திய உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் டிக் டோக் விற்பனையாளர்களுக்காக, வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி 2025 சமூகமுனைவோர் உச்ச நிலை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோலாலாம்பூர், புக்கிட் ஜாலில், MRANTI பூங்காவில் காலை 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஒரு நாள் விழாவை, அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட டிக் டோக் நேரலை உள்ளடக்க உருவாக்குநர் நிறுவனமான Avision Media ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிறுவனம், டிக் டோக் வாயிலாக உள்ளூர் உள்ளடக்க உருவாக்குநர்கள், இணைய விற்பனையாளர்கள், டிஜிட்டல் தொழில்முனைவோர் ஆகியோரை வலுப்படுத்தி ஆக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டதாகும்.

மலேசிய டிஜிட்டல் உலகின் முன்னோடிகளாகத் திகழும் 15 சாதனையாளர்களின் சொற்பொழிவும் இந்நிகழ்வில் இடம் பெறவிருப்பதாக, Avision Media தலைமை செயலதிகாரியும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான சுரேஷ் தனசேகரன் தெரிவித்தார்.

நாட்டின் முதல் நிலை மின்னியல் தமிழ் ஊடகமான வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குநர் எம். தியாகராஜனும் அவர்களில் ஒருவர்.

உள்ளடக்கத் தயாரிப்பு, தொழில் உருமாற்றம், வர்த்தக முத்திரையியல், டிக் டோக்கில் affliate வணிகத்தில் வெற்றிப் பெறுவதற்கான இரகசியங்கள் போன்றவற்றை அவர்கள் பகிர்ந்துகொள்வர்.

சிறப்பம்சமாக வணக்கம் மலேசியா நேயர்களில் B40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படுவதாகவும் சுரேஷ் கூறினார்.

எனினும், இரண்டாவது வருமானத்தை ஈட்ட விரும்பும் அல்லது இந்நிகழ்ச்சியில் அதற்கான வழிவகைகளைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருப்போருக்கே இதில் முன்னுரிமை வழங்கப்படும் என்றார் அவர்.

டிக்கெட் விலை 59 ரிங்கிட் 90 சென் மட்டுமே. ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

எனவே, ஆர்வமுள்ள டிக் டோக் விற்பனையாளர்கள், _ affliates_கள், உள்ளடக்க உருவாக்குநர்கள், காலம் தாழ்த்தாமல் இன்றே டிக்கெடுக்குகளுக்கு முன்பதிவு செய்யவும்

To purchase ticket :

http://www.ticket2u.com.my
Or call 019-630 7990

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!