
கோலாலம்பூர், அக் 24 –
47 ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில்
பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ( Donald Trump) சனிக்கிழமை இரவு வாஷிங்டனிலிருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை மலேசியா வந்தடைவார்.
கோலாலம்பூரில் தங்கியிருக்கும் வேளையில் மாலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ரஹிமுடன் இருவழி சந்திப்பை நடத்தும் டோனல்ட் டிரம்ப் பின்னர் ஆசியான் தலைவர்களுடனான இரவு விருந்திலும் கலந்துகொள்வார்.
அதன்பின் அவர் திங்கட்கிழமை காலையில் ஜப்பானிய பிரதமர் Sanae Takaichi யை சந்தித்த பின் புதன்கிழமை காலையில் பூசான் சென்றடையும் டிரம்ப் தென் கொரிய அதிபர் Lee Jae-myungகை சந்திப்பார். வாஷிங்டன் திரும்புவதற்கு முன் டிரம்ப் வியாழக்கிழமையன்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கையும் ( Xi Jinping) சந்திப்பார்.



