
சிரம்பான், மார்ச்-17 – நாடளாவிய நிலையிலுள்ள ஆலயங்களின் நிலைமைகளைக் கண்டறியும் பொருட்டு, மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவை நடத்தி வரும் roadshow சந்திப்புகள், நேற்று நெகிரி செம்பிலானில் நடைபெற்றன.
பஹாவ் பட்டணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்தில் காலை 11 மணிக்குத் தொடங்கியக் அக்கூட்டத்திற்கு, மஹிமா தலைவர் டத்தோ என்.சிவகுமார் தலைமையேற்றார்.
அதில் 100 கோயில்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டு முயற்சியை வளர்ப்பது, சமூக சவால்களை எதிர்கொள்வது மற்றும் இந்து சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒன்றுபடுவது ஆகியவற்றில் கூட்டம் கவனம் செலுத்தியது.
Roadshow-வின் இரண்டாவது நிறுத்தமாக, சிரம்பான் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தானத்தில் மாலை 6 மணிக்குச் சந்திப்புத் தொடங்கியது.
50 கோயில்களின் பிரதிநிதிகளுடனான அந்தக் கலந்தாய்வு, ஒத்துழைப்பை மேம்படுத்துதல், சமூகச் சவால்களை எதிர்கொள்வது மற்றும் இந்து சமூக வளர்ச்சிக்கான தூரநோக்குப் பார்வையில் கவனம் செலுத்தியது.
அக்கூட்டத்தை ஊக்கமளிக்கும் ஒன்றாக மாற்றியதற்காக கோயில் தலைவர் மற்றும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் டத்தோ சிவகுமார் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த அர்த்தமுள்ள நிகழ்வுகள் வாயிலாக, நாம் ஒரு வலுவான இந்து சமூகத்தை உருவாக்குவோம் என அவர் குறிப்பிட்டார்.