
கோலாலம்பூர், நவம்பர்-12 – ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக RM4.16 என மதிப்பு வலுப்பெற்று, பரிவர்த்தனையில் ஆசியாவிலேயே சிறப்பாக இயங்கி வரும் நாணயமாக மலேசிய ரிங்கிட் திகழ்கிறது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் அதனைத் தெரிவித்தார்.
முன்பு ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்த போது தமதரசாங்கத்தைத் தாக்கியவர்கள், இப்போது மௌனமாக உள்ளனர்.
குறைக்கூறிய வாய்களுக்கு பாராட்ட மனம் வரவில்லை என அன்வார் மறைமுகமாக எதிர்கட்சிகளை சாடினார்.
மடானி பொருளாதாரக் கொள்கை அமுலுக்கு வந்த இந்த 18 முதல் 24 மாதங்களில், அதன் தாக்கத்தை அரசாங்கம் எப்படி மதிப்பிடுகிறது என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அன்வார் அவ்வாறு கூறினார்.
வெள்ளிக்கிழமை பரிவர்த்தனை முடிவில் RM 4.17-க பதிவாகிய ரிங்கிட்டின் மதிப்பு, 13 மாதங்களில் இல்லாத புதிய உச்சமாக திங்கட்கிழமை RM4.16-க வலுப்பெற்றது குறிப்பிடத்தக்கது.



