
டெல்லவிஃப், அக்டோபர்-28, காசா தீபகற்பத்தில் ஹமாஸ் தரப்புடன் தற்காலிக போர் நிறுத்தத்தை கொண்டு வரும் எகிப்தின் முயற்சியை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ நிராகரித்துள்ளார்.
கைதிகளை மாற்றிக் கொள்வதற்காக அந்த 2 நாள் போர் நிறுத்தத்தை எகிப்திய அதிபர் Abdel Fattah Al-Sisi ஞாயிறன்று பரிந்துரைத்திருந்தார்.
பிறகு போர் நிறுத்தத்தை நிரந்தரமாக்க, 10 நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெறும் என அவர் அறிவித்தார்.
இஸ்ரேலிய அமைச்சர்களில் பெரும்பாலோருக்கு அதில் உடன்பாடே என்றாலும், நெத்தன்யாஹுவுக்கு அதில் விருப்பமில்லை.
தாக்குதல் நடக்கும் போதே பேச்சுவார்த்தையும் நடக்க வேண்டுமென்பதில் அவர் உறுதியாக உள்ளாராம்.
உடனடி போர் நிறுத்தத்தை ஐநா பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும், 2023 அக்டோபர் முதல் பேரளவிலான தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதுவரை 43,000 பேர் கொல்லப்பட்டு, பெண்கள் சிறார்கள் உட்பட 100,000 பேர் காயமடைந்துள்ளனர்.