Latestமலேசியா

ஆபாச உள்ளடக்கம்: 5,203 பதிவுகள் அகற்றம்; 4,380 இணையத் தளங்கள் முடக்கம் – ஃபாஹ்மி

கோலாலாம்பூர், மார்ச்-4-இணையத்தில் உலா வரும் ஆபாச உள்ளடக்கங்களை நீக்க தொடர்பு – பல்லூடக ஆணையமான் MCMC தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அவ்வகையில், 2022 ஜனவரி முதல் இவ்வாண்டு மார்ச் வரை, மொத்தம் 6,481 ஆபாச உள்ளடக்கங்களை நீக்குமாறு கோரிக்கை விடப்பட்டது.

அவற்றில் 5,203 பதிவுகள் அதாவது 80% உள்ளடக்கங்கள் வெற்றிகரமாக நீக்கப்பட்டதாக தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி பாட்சில் இன்று மேலவையில் தெரிவித்தார்.

அதே காலக்கட்டத்தில் MCMC கேட்டுக் கொண்டதற்கிணங்க, 4,380 ஆபாச இணையத் தளங்களை சேவை வழங்குநர்கள் முடக்கியதாகவும் ஃபாஹ்மி சொன்னார்.

பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள், சமூக ஊடக விதிமுறைகள், மற்றும் உள்ளூர் சட்டங்கள் அடிப்படையில் அப்பதிவுகள் நீக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பயனர்களுக்கு இணையம் முழு அளவில் பாதுகாப்பாக இருப்பதை உறுதிச் செய்ய, சட்டம் 866 என அழைக்கப்படும் இணையப் பாதுகாப்புச் சட்டத்தை ஜனவரி 1 முதல் அரசாங்கம் அமுல்படுத்தியிருப்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

அச்சட்டத்தின் கீழ், தீங்கிழைக்கும் உள்ளடக்கங்களைத் தடுக்கும் ஒழுங்குமுறைகளை சமூக ஊடக சேவை வழங்குநர்கள் அமுல்படுத்துவது கட்டாயமாகும்.

சட்டம் 866 அமுலுக்கு வந்த இந்த ஒன்றரை மாதங்களில் 6 ஆபாசப் பதிவுகளை நீக்குமாறு MCMC கோரிக்கை வைத்து, அவை அனைத்தும் நீக்கப்பட்டதாகவும் ஃபாஹ்மி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!