
அலோர் ஸ்டார், பிப்ரவரி-25 – கெடா, அலோர் ஸ்டாரில் உள்ள பேரங்காடியொன்றில் escalator எனப்படும் மின்படிக்கட்டில் 2 வயது சிறுவனின் வலது கால் சிக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றிரவு 8.30 மணிக்கு மேல் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு – மீட்புத் துறையினர், சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தி சுமார் அரை மணி நேரத்தில் சிறுவனது காலை பாதுகாப்பாக வெளியே எடுத்தனர்.
வலியிலும் அதிர்ச்சியிலும் இருந்த சிறுவன் சமாதானப்படுத்தப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
பின்னர் மேல் பரிசோதனைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவன் கொண்டுச் செல்லப்பட்டான்.