
ஆயேர் கூனிங், ஏப்ரல் 25 – நாளை ஆயேர் கூனிங் இடைத்தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில், இந்தியர்களின் வாக்கு பெரிக்காதான் நேஷனல் பக்கம் திரும்பக்கூடிய வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறுகிறார் பெர்சாத்து கட்சியின், பெர்செகுத்து பிரிவின் துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ சஞ்ஞீவன்.
தாம் அங்கு வீடு வீடாகச் சென்று நேரடியாக இந்திய வாக்காளர்களைச் சந்தித்தப்போது, அவர்கள் காட்டிய வரவேற்பு தமக்கு இந்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக அவர் கூறினார்.
அதே சமயத்தின் பெரிக்காதான் நேஷனல் கூடணியின் மீது அவர்களின் கண்ணோட்டம் நேர்மறையாக இருந்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது பற்றியும் தம்முடன் பகிர்ந்துக் கொண்டதாக சஞ்ஞீவன் கூறினார்.
இதனிடையே, நாளை தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றி புதிய சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கவுள்ளனர். அங்குள்ள 31,000 வாக்காளர்களில் 4600 பேர் இந்தியர்கள்.