Latestஉலகம்

கோவா தீ விபத்து தொடர்பில் தேடப்பட்ட இரவு கேளிக்கை மைய உரிமையாளர்கள் இருவர் தாய்லாந்தில் கைது

புக்கெட், டிசம்பர்-11 – இந்தியா, கோவாவில் இரவு கேளிக்கை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில், அதன் உரிமையாளர்கள் இருவர் தாய்லாந்தில் கைதாகியுள்ளனர்.

கடந்த ஞாயிறன்று 25 பேரை பலிகொண்ட அவ்விபத்தைத் தொடர்ந்து, Gavrav, Saurabath Luthra ஆகிய 2 சகோதரர்களும் சுற்றுலா தீவான புக்கெட்டுக்குத் தப்பியோடினர்.

இரு நாட்டு போலீஸாரும் தகவல் பரிமாற்றம் செய்ததன் பலனாக சந்தேக நபர்கள் கைதாகி, தற்போது நாடு கடத்தப்படவுள்ளனர்.

இருவரும் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்றாலும், அச்சம்பவத்திற்கு அவர்கள் ‘பலிகடா’ ஆக்கப்பட்டிருப்பதாக அவர்களின் வழக்கறிஞர் கூறினார்.

டெல்லி நீதிமன்றம் அண்மையில் அச்சகோதரர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்து; அவர்களின் கடப்பிதழை இரத்துச் செய்யவும் நடவடிக்கை எடுத்தது.

அத்தீயில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் Birch By Romeo Lane கேளிக்கை மையத்தின் பணியாளர்கள் ஆவர்; 4 பேர் டெல்லியிலிருந்து வந்த சுற்றுப் பயணிகள்.

கிளப்புக்குள் பட்டாசு வெடித்ததே தீ விபத்துக்குக் காரணம் என தொடக்கக் கட்ட விசாரணை அறிக்கைக் கூறுகிறது.

இதுவரை 6 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்; மேலும் கைது நடக்கும் என கோவா முதல்வர் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!