
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 26 – நேற்று மாலை, கோத்தா பாரு தானா மேரா அருகே தனது 8 வயது மகன் ஆற்றில் தவறி விழுந்த நிலையில் காப்பாற்றிய தந்தை பின்னர் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அனைவரையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இறந்திருக்கலாம் என அஞ்சப்படும் அந்த நபர் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு தனது மகனுடன் ஜாலான் கம்போங் சாட் (Jalan Kampung Sat)பகுதியில் நடந்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அச்சமயம் சிறுவன் ஆற்றில் தவறி விழுந்தபோது, தந்தை உடனே ஆற்றில் குதித்து தனது மகனை வெற்றிகரமாக மீட்ட பின்னர் அவர் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டார் என்று தனா மேரா தீயணைப்பு நிலைய செயல்பாட்டுத் தளபதி ரோஸ்லான் இஸ்மாயில் (Roslan Ismail) தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தங்களது மீட்பு பணியில் உடனே ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.