
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-12 – அண்மைய மலேசிய வருகையின் போது பிரிட்டன் திறன், மகளிர் மற்றும் சமத்துவ அமைச்சர் Baroness Smith Melvarn, மனிவளவ மேம்பாட்டு கழகமான HRD Corp-பின் தலைமையகத்துக்கும் வருகைப் புரிந்தார்.
இரு வழி ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைக் கண்டறிவதில், அவ்வருகை அமைந்ததாக HRD Corp அறிக்கையொன்றில் கூறியது.
திறன் பயிற்சிகள், ஆள்பலத் துறை மேம்பாடு, உள்ளூர் திறமையாளர்கள் உள்ளிட்ட துறைகளை அந்த உத்தேச ஒத்துழைப்பு உள்ளடக்கியுள்ளது.
அதே சமயம், ஆசியான் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை மலேசியா ஏற்றுள்ளதைக் குறிக்கும் விதமாக முன்னெடுக்கப்பட்ட ASEAN Year of Skills – AYOS 20025 திட்டத்தை HRD Corp வழியாக மனிதவள அமைச்சு ஏற்பாடு செய்ததும் இச்சந்திப்பில் பகிரப்பட்டது.
இது, இரு வழி உறவுகளை மட்டும் வலுப்படுத்தவில்லை; மாறாக அர்த்தமுள்ள அனைத்துலக ஒத்துழைப்பை மேம்படுத்தும் கூட்டு அபிலாஷைகளை வெளிப்படுத்தியதாக, HRD Corp தலைவர் டத்தோ அபு ஹுராய்ரா அபு யாசிட் ( Datuk Abu Huraira bin Abu Yazid) கூறினார்.
இவ்வேளையில், போட்டித்தன்மை கொண்ட ஆள்பலத் துறையை மேம்படுத்தி, எதிர்காலத்திற்குத் தயாராக மலேசியா – பிரிட்டன் இடையில் கூடுட் ஒத்துழைப்பின் அடையாளமாக இச்சந்திப்பு விளங்குவதாக, HRD Corp தலைமை செயலதிகாரி Dr Syed Alwi bin Mohamed Sultan வருணித்தார். கல்வி, திறமை மேம்பாடு, புத்தாக்கம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கடப்பாட்டை இச்சந்திப்பு உறுதிச் செய்கிறது.
அதிகரித்து வரும் சவாலான மற்றும் வேகமாக மாறிவரும் உலகப் பொருளாதாரத்தில் போட்டியிட இவை அனைத்தும் முக்கியம் என Syed Alwi கூறினார். Baroness Smith-த்தின் வருகையில், மலேசியாவுக்கான பிரிட்டன் உயர் ஆணையர் அஜய் ஷர்மாவும் (Ajay Sharma) உடன் வந்திருந்தார்.
அவர்களை, மனிதவள அமைச்சரின் அரசியல் செயலாளர் Dr Kelvin Yii Lee Wuen, Datuk Abu Huraira, Dr Syed Alwi உள்ளிடோர் வரவேற்றனர்.