
பிரிஸ்பன், மார்ச்-16-மலேசிய ஸ்குவாஷ் நட்சத்திரம் சிவசங்கரி, 2026 ஆஸ்திரேலிய பொது விருது மகளிர் பட்டத்தை வென்றுள்ளார்.
பிரிஸ்பனில் நடைபெற்ற இறுதியாட்டத்தில், அமெரிக்காவின் Marina Stefanoni-யை வெறும் 28 நிமிடங்களில் 3-0 என்ற செட் கணக்கில் அவர் வீழ்த்தினார்.
இது, 2025 பிப்ரவரியில் சின்சினாட்டி ஸ்குவாஷ் போட்டியில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, 13 மாத இடைவெளிக்குப் பின் சிவசங்கரிக்கு கிடைத்த முதல் வெற்றியாளர் பட்டமாகும்.
சிவசங்கரியின் வெற்றி வறட்சி முடிவுக்கு வந்திருப்பதைப் பாராட்டி முன்னாள் இளைஞர்-விளையாட்டுத் துறை அமைச்சரும் இன்னாள் கூட்டர பிரதேச அமைச்சருமான ஹானா இயோ ஃபேஸ்புக் பதிவில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஸ்குவாஷ் சகாப்தம் டத்தோ நிக்கோல் டேவிட்டுக்குப் பிறகு நாட்டின் பெருமையை உலக ஷ்குவாஸ் அரங்கில் நிலைநிறுத்தி வருகிறார் சிவசங்கரி…


