Latestஇந்தியாஉலகம்

நச்சால் பாதிக்கப்பட்ட குமட்டிப்பழம் காரணமா? மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சோகம்

மும்பை, ஏப்ரல்-28-இந்தியா மும்பையில் நடந்த துயரமான சம்பவம் ஒன்றில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர், நச்சுணவுப் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

விருந்தினர்கள், உறவினர்கள் வருகையோடு, கணவன் மனைவி 2 பெண் பிள்ளைகள் என நால்வரடங்கிய அக்குடும்பத்தினர் ஒன்றாக சேர்ந்து பிரியாணி உணவு உட்கொண்டனர்.

அதன் பின்னர், இரவு நேரத்தில் குமட்டிப் பழம் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த நாள் அதிகாலை, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் பலவீனம் போன்ற கடுமையான அறிகுறிகள் ஏற்பட்டதால், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி நால்வரும் உயிரிழந்தனர்.

பிரியாணி சாப்பிட்ட மற்றவர்கள் பாதிக்கப்படாத நிலையில், குமட்டிப் பழமே விஷமடைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதாவது பழத்தின் தோற்றத்தை மேம்படுத்தவோ அல்லது நீண்ட நாட்கள் கெடாமல் வைத்திருக்கவோ, அதில் தீங்கான பொருட்கள் ஊசி மூலம் செலுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால், மரணத்திற்கான உண்மைக் காரணம் தடயவியல் அறிக்கைகள் மூலம் உறுதிச் செய்யப்படும் வரை எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!