Latestமலேசியா

இத்தாலியில் சிக்கிக் கொண்ட மலேசியருக்கு உதவுமாறு தூதரகத்துக்கு பிரதமர் அன்வார் உத்தரவு

கோலாலம்பூர், ஜூலை-2 – மிலான் நகரில் கடப்பிதழ் திருடுபோனதால் சிக்கித் தவிக்கும் மலேசியப் பெண் Dalila Zaidi-க்கு உடனடியாக உரிய உதவிகளை வழங்குமாறு, இத்தாலியில் உள்ள மலேசியத் தூதரகத்துக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

கடப்பிதழ் காணாமல் போனதால் X தளத்தில் பிரதமரிடம் Dalila உதவி கேட்டு முன்னதாக பதிவிட்டிருந்தார்.

இதையடுத்தே வெளியுறவு அமைச்சுக்கு இந்த உத்தரவு பறந்துள்ளது.

அவசர பயண ஆவணம் கோரி ரோமில் உள்ள மலேசியத் தூதரகத்தில் உதவி கேட்டதாகவும், ஆனால் ஆவணங்களைக் கையெழுத்திடும் அதிகாரம் பெற்ற அதிகாரி இல்லையென்பதால் உதவ இயலாது என்றும் தம்மிடம் கூறப்பட்டதாக Dalila கூறியிருந்தார்.

பிரதமர் அன்வார் ஜூலை 1 முதல் 3 வரை அலுவல் பயணமாக இத்தாலியில் உள்ளார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!