
ஷா ஆலாம், டிசம்பர்-11 – “இந்தப் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்”…
சமூக ஊடகங்களில் இன, மத அடிப்படையிலான கேலிகள் மோசமாகி வருவதை கடுமையாக கண்டித்து சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் வெளியிட்ட வார்த்தை அது…!
இணையத்தில் பரவி வரும் இன, மத வெறுப்பு கருத்துக்கள் நாட்டின் ஒற்றுமைக்கு மிகவும் ஆபத்தானவை என அவர் எச்சரித்தார்.
உதாரணத்திற்கு Type C, Type M என இனங்களைக் குறிக்கும் வகையில் பதிவுகளும் கருத்துகளும் பரவலாகப் பகிரப்படுவதை அவர் சாடினார்.
மலேசியா, பல்லின மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து வாழும் நாடு என்பதால், சமூக ஊடகங்களில் வெறுப்பு பரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என சுல்தான் ஷாராஃபுடின் வலியுறுத்தினார்.
அதிகாரிகளும் சட்ட அமுலாக்கத்துறையும் இத்தகைய செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“ஒற்றுமை மற்றும் மரியாதையே மலேசியாவின் அடித்தளம்” என, தனது பிறந்தநாளை ஒட்டி பெர்னாமாவுக்கு வழங்கிய பேட்டியில் அவர் நினைவூட்டினார்.



