Latestமலேசியா

இந்தியச் சமூகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் விரைவாகவும் வெளிப்படையாகவும் செயல்படுத்தப்படும் – ரமணன்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-28 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த RM40 மில்லியன் மதிப்புள்ள 4 புதிய முயற்சிகள் இந்தியச் சமூகத்தை வலுப்படுத்தும் நோக்கில் விரைவாகவும், வெளிப்படையாகவும், திறம்படவும் நடைமுறைக்கு வரும்.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவ்வாறு கூறியுள்ளார்.

இந்த முயற்சிகள் தெளிவான கண்காணிப்பு முறைகளுடன், நெறிமுறைப் பிரிவு மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC உட்பட பல்வேறு அரசு அமைப்புகளின் நெருக்கமான ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும்.

“மடானி அரசின் கடப்பாடு தெளிவானது; அதாவது, இந்தியச் சமூகம் தேசிய மேம்பாட்டில் பின்தங்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதே”

எனவே, செலவழிக்கப்படும் ஒவ்வொரு காசும் முழுமையான நேர்மையுடனும் நிர்வகிக்கப்பட்டு, இலக்கு வைக்கப்பட்ட பயனர்களைச் சென்றடைவதும், நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதும் உறுதிச் செய்யப்படும் என்றார் அவர்.

இந்த 4 முன்னெடுப்புகளின் அமுலாக்கம், மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ராவின் கீழ் இந்திய சமூக முயற்சிகளுக்கான செயலாக்கக் குழுக் கூட்டத்தில், பிரதமர் தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது.

இந்தியச் சமூகம் குறிப்பாக B40 வர்த்கத்தினர், எந்தவொரு நிர்வாக கெடுபிடிகளும் இல்லாமல் அரசாங்க ஒதுக்கீட்டுகளை நேரடியாக அனுபவிப்பதை உறுதிச் செய்வதே அவற்றின் நோக்கம் என்றார அவர்.

RM5 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் இந்திய குடியிருப்புகளில் உள்கட்டமைப்பு, பொது வசதிகள் மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டதாகவும், மேலும் RM5 மில்லியன் ரிங்கிட் தமிழ் தேசிய வகை பள்ளிகளில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப ஆய்வக உபகரணங்களை மேம்படுத்துவதற்கும் ஒதுக்கப்பட்டதாக அண்மையில் அன்வார் அறிவித்தார்.

அதோடு, தர்மா திட்டத்தின் கீழ் இந்து கோவில்களை சமூக மையங்களாக வலுப்படுத்த RM20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது; மேலும், RM10 மில்லியன் ரிங்கிட் நிதி, தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் சிறிய பழுது பார்க்கும் பணிகள் மற்றும் பராமரிப்புகளுக்காக செலவிடப்படும் என அன்வார் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!