
பேங்காக், ஜன 26 – இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் நீப்பா வைரஸ் கிருமி பரவியதைத் தொடர்ந்து மூன்று விமான நிலையங்களில் நோய் கட்டுப்பாட்டு பரிசோதனையை தாய்லாந்து தீவிரப்படுத்தியுள்ளது.
Suvarnabumi , Don Mueang மற்றும் Phuket விமான நிலையங்களில் நோய் கட்டுப்பாட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேங்காக் போஸ்ட் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
மூன்று முக்கிய விமான நிலையங்களின் அதிகாரிகள் உடல் வெப்பநிலை சோதனைகள் மற்றும் நோய் அறிகுறிகளைக் காட்டும் பயணிகளின் இடத்திலேயே மதிப்பீடுகள் உள்ளிட்ட பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளனர்.
அதிக காய்ச்சல் அல்லது நிப்பா வைரஸ் தொற்றைக் குறிக்கும் அறிகுறிகள் உள்ள பயணிகள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு மாற்றப்படும் சாத்தியம் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
மேற்கு வங்காளத்திலிருந்து வரும் பயணிகள் காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை வலி, தொண்டை வலி, இருமல், சுவாசிப்பதில் சிரமம், அதிக தூக்கம், குழப்பம் மற்றும் வலிப்பு உட்பட தொற்றின் அறிகுறிகளை கொண்டிருந்தால் அதனை கண்காணிக்கும்படியும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு பயணம் செய்யத் திட்டமிடும் தனது பிரஜைகளுக்கான பயண வழிகாட்டுதலையும் தாய்லந்து நோய் கட்டுப்பாட்டுத்துறை வெளியிட்டது.



