
இந்தியா AI மாநாட்டில் பெரும் சர்ச்சை ; ரோபோ நாயை சொந்த கண்டுபிடிப்பாக காட்டியதால் வந்த சிக்கல்
இந்தியா, பிப்ரவரி 19 –
நியூ டெல்லியில் நடைபெற்ற AI Impact Summit 2026 மாநாட்டில், கல்கோட்டிஸ் (Galgotias) பல்கலைக்கழகம் ஒரு ரோபோ நாயை தங்களது சொந்த கண்டுபிடிப்பாக காட்டியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஆனால் சமூக ஊடகங்களில் அது உண்மையில் சீன நிறுவனமான Unitree Robotics உருவாக்கிய Unitree Go2 என்ற ரோபோ நாய் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பின்பு பல்கலைக்கழகம், “நாங்கள் ரோபோவை உருவாக்கவில்லை. எமது மாணவர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறனை வளர்த்துக்கொள்வார்கள்” எனத் தெரிவித்தது.
இந்தச் சம்பவம் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை வெளிநாடுகளில் எவ்வாறு காண்பிக்க வேண்டும் என்பதற்கான கேள்விகளை எழுப்பி, சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.



