Latestமலேசியா

இந்திய மாணவர்களை உயர்த்த MIED தயாராக உள்ளது; SPM வாழ்த்துச் செய்தியில் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதி

கோலாலம்பூர், ஜனவரி-3, 2024 SPM தேர்வை இந்திய மாணவர்கள் அனைவரும் சிறப்பாக எழுதுங்கள்; உங்களின் உயர்க்கல்விப் பயணத்திற்கு மஇகா-வின் கல்விக் கரமான MIED எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் என AIMST பல்கலைக்கழக வேந்தர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நம் எதிர்கால வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் உரிய ஒரேக் கருவி, கல்வி ஒன்றுதான்; இதை அனைத்து மாணவர்களும் குறிப்பாக SPM தேர்வெழுதும் மாணவர்கள் மனதில் ஆழமாக பதியவைத்து மிகுந்த அக்கறையோடும் கவனத்துடனும் தேர்வை எழுதும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

அடுத்த சில மாதங்களில் மெட்ரிகுலேசன் கல்லூரிகளில் சேர இருக்கிறீர்கள்; எஸ்டிபிஎம் வகுப்பிலும் ஒருசாரார் சேரக்கூடும்.

இத்தகைய மாணவர்களின் உயர்க்கல்விப் பயணத்திற்கு துணை வர, பன்னாட்டுத் தரத்திலான AIMST பல்கலைக்கழகம் எப்பொழுதும் தயாராக இருக்கிறது.

குறைந்த அடைவு நிலையைப் பெறும் மாணவர்கள் கூட, தங்களின் அடுத்தக் கட்ட நகர்வு குறித்து எவ்வித தயக்கமும் காட்டத் தேவையில்லை.

அவர்ககளுக்காக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள TVET தொழில்நுட்ப கல்வித் திட்டத்துடன் TAFE கல்லூரி தயாராக உள்ளது.

எனவே, மாணவர்களின் உயர் கல்வி பயணத்திற்கு மஇகா எப்போதும் தயாராக இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு, அந்த நம்பிக்கையுடன் SPM தேர்வை சிறப்பாக எழுதுங்கள் என்று மஇகா தேசியத் தலைவருமான தான் ஸ்ரீ விக்கி கேட்டுக் கொண்டார்.

டிசம்பர் 2-ஆம் தேதி SPM வாய்மொழித் தேர்வுகள் தொடங்கிய நிலையில், நேற்று முதல் எழுத்துப்பூர்வத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!