
கோலாலம்பூர், மார்ச்-31-நாடு தழுவிய நிலையில் எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளிவந்த நிலையில் தேர்வில் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள். குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும், தேர்ச்சி பெறாதவர்களும் மனம் தளர வேண்டாம்.
ஒவ்வொருவருக்கும் முன்னேறும் வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்கான சரியான பாதையை காட்ட ம.இ.கா எப்போதும் தயாராக உள்ளதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
ஒரு மாணவனின் வாழ்க்கையில் உயர்கல்வி என்பது மிக முக்கியமான அடித்தளமாகும். அதை சரியான முறையில் திட்டமிட்டு, முழு முயற்சியுடன் மேற்கொள்வது அவசியம்.
இந்திய மாணவர்கள் தங்கள் கல்வி புரட்சியை தொடர வாழ்த்துகிறேன். தொடர்ந்து மாணவர்கள் உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் தங்கள் உயர்கல்வியை தொடர வாழ்த்துவதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ம.இ.கா என்றும் துணையாக இருக்கிறது. அந்த வகையில் ம.இ.கா MIED மூலம் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு கல்வி உபகார சம்பளம் மற்றும் கல்வி கடனுதவியை வழங்கி வருவதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்திய மாணவர்கள் குறிப்பாக பி40 பிரிவு மாணவர்களுக்கு ம.இ.கா MIED மூலம் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், டேஃப் கல்லூரி மற்றும் கூடிய விரைவில் திறக்கப்படவிருக்கும்
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஏய்ம்ஸ்ட் கல்லூரியிலும் உயர்கல்வி படிக்க வாய்ப்பு வழங்கப்படுவதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
இந்த நாட்டில் இந்திய மாணவர்கள் கல்வி வழி மட்டுமே உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். கல்வி கற்கின்ற காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
கல்வியே மாணவர்கள் சாதனை படைக்க உதவும். கல்வியில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மாணவர்கள் ம.இ.காவின் MIED, ஏய்ம்ஸ்ட், டேஃப் கல்லூரி மூலம் வழங்கி வரும் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து மாணவர்களும் தொடர்ந்து முயன்று, வெற்றியின் பாதையில் முன்னேற வாழ்த்துகள். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.



