
கோலாலம்பூர், அக்டோபர் 28 –
ஆசியான் உச்ச மாநாட்டின் நேரடி ஒளிபரப்பில், தலைவர்களின் பெயர்களை தவறாக கூறிய சம்பவத்திற்காக RTM கேட்டுக்கொண்ட மன்னிப்பை இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஏற்றுக்கொண்டன.
RTM-இன் தலைவர் டத்தோ சுஹைமி சுலைமான், இந்தோனேசிய பிரதிநிதிகளையும், சிங்கப்பூர் தூதர் வானு கோபால மேனனையும் சந்தித்து மன்னிப்பு தெரிவித்துக் கொண்டார்.
RTM ஒளிபரப்பில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) என்பதற்குப் பதிலாக லீ சியன் லூங் (Lee Hsien Loong) என்றும், இந்தோனேசிய அதிபர் ப்ரபோவோ சுபியாண்டோ (Prabowo Subianto) என்பதற்குப் பதிலாக ஜோகோ விடோடோ (Joko Widodo) என்றும் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இச்சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் , எதிர்காலத்தில் இதுபோன்ற பிழைகள் மீண்டும் நடக்காமலிருக்க RTM இன் தொகுப்பாய்வு செயல்முறைகளை மேம்படுத்துவோம் என்றும் சுஹைமி உத்தரவாதம் அளித்தார்.



