
புத்ரா ஜெயா, ஜன 20 – இந்த ஆண்டு முதல் 4 ஆம் வகுப்பு மாணவர்கள் புதிய தரப்படுத்தப்பட்ட மதிப்பீட்டு தேர்வை எழுதுவார்கள்.
தேசிய மொழி ( Bahasa Melayu ), ஆங்கிலம், அறிவியல், கணிதம் மற்றும் வரலாறு ஆகிய ஐந்து பாடங்களை இந்த தேர்வு உள்ளடக்கியுள்ளதாக பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
இந்த ஆண்டு முதல், 4 ஆம் வகுப்பு மதிப்பீட்டை மலேசிய தேர்வு வாரியம் நிர்வகிக்கும் என்று தேசிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றியபோது பிரதமர் தெரிவித்தார்



