Latestமலேசியா

இந்த நீண்ட விடுமுறையில் 3 லட்சம் மலேசியர்கள் தென் தாய்லாந்துக்கு பயணித்துள்ளனர்

பேங்கோக், ஜூன்-6 – ​கடந்த மே 27 முதல் ஜூன் 4 வரையிலான பள்ளி விடுமுறை மற்றும் ஹஜ் பெருநாள் விடுமுறை நாட்களில், சுமார் 3 லட்சம் மலேசிய சுற்றுப் பயணிகள் தென் தாய்லாந்திற்குப் படையெடுத்துள்ளனர்.

இதனால் அங்குள்ள 30,000-க்கும் மேற்பட்ட ஹோட்டல் அறைகள் முழுமையாக நிரம்பியதுடன், ஒரு பில்லியன் பாட் அதாவது சுமார் 123 மில்லியன் ரிங்கிட் வருவாயும் ஈட்டப்பட்டுள்ளது.

Hat Yai, சொங்க்லா, சாதுன், கிராபி போன்ற பகுதிகள் மலேசியர்களின் முதன்மை தேர்வாக இருந்தன.

மலிவான மற்றும் சுவையான உணவுகளுக்காக அங்கு சென்றதாகப் பயணிகள் குறிப்பிட்டாலும், சடாவ் (Sadao) எல்லைச் சாவடியில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக, மலேசியர்கள் தாயகம் திரும்ப 4 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சிலர் தங்களின் வாகனங்களிலேயே இரவைக் கழிக்கும் நிலையும் ஏற்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!