Latestமலேசியா

இனி மனிதன் உயிர்வாழ தண்ணீர் தேவையில்லை; நிருபித்து காட்டிய கென்யா பழங்குடியினர்

நைரோபி, மார்ச்-20-என்னதான் மனித உடல் பெருமளவு நீரினால் ஆனது என்றாலும், கிட்டத்த நீர் இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியுமா என்பது கேள்விக் குறியே…

ஆனால், அது சாத்தியமே என்பதை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிரூபித்து வருகிறது ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள ஒரு பழங்குடி சமூகம்.

ஆம், மேய்ச்சல் சமூகத்தினரான இந்த பழங்குடி மக்கள், மிகவும் குறைந்த தண்ணீரில் வாழ உதவும் தனிச்சிறப்பான மரபணு மாற்றங்களை உருவாக்கியுள்ளனர்.

இந்த பழங்குடியினர் பாரம்பரியமாக மாமிசம், பால் மற்றும் மிருக இரத்தம் ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள்.

பல நூற்றாண்டுகளாக, இயற்கையாகவே இவர்களின் உடல் தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளும் திறனை வளர்த்துள்ளது.

இதனால், கடுமையான வெப்பமும் தண்ணீர் பற்றாக்குறையும் உள்ள சூழலில் கூட அவர்களால் உயிர் வாழ முடிகிறது.

ஆனால் இது திடீர் மாற்றம் அல்ல, மாறாக சுமார் 5,500 ஆண்டுகளுக்கு முன்பு அதிகரித்த வட்டார வறட்சியின் காரணமாக ஏற்பட்ட நீண்ட கால பரிணாம வளர்ச்சியின் விளைவு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இம்மக்களின் சிறுநீரகங்கள் மிக அதிகமாக மாற்றமடைந்துள்ளதால்,
அவை தண்ணீரை மிகவும் திறம்பட சேமித்து, அதிகளவிலான மிருகப் புரதத்தை எடுத்து கொண்டு உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் செயல்படுத்த முடிகிறது.

எனவே மனிதர்கள் காலப்போக்கில் கடுமையான சூழ்நிலைகளுக்கு தங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதை இந்த பழங்குடி சமூகங்கள் நமக்கு நிரூபிக்கின்றன…

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!