Latestமலேசியா

இன, சமய விவகாரங்கள் தொடர்பாக பாஸ் தலைவர்கள் வணக்கம் மலேசியாவோடு கலந்துரையாடல்

இன, சமய விவகாரங்கள் தொடர்பாக பாஸ் தலைவர்கள் வணக்கம் மலேசியாவோடு கலந்துரையாடல்

நாட்டில் தற்போது நிலவிவரும் பல்வேறு இன, சமய விவகாரங்கள் தொடர்பில் இந்தியச் சமூகத்தின் உணர்வுகளை அறிந்து கொள்ளும் வகையில் சிலாங்கூர் பாஸ் தலைமைத்துவம் வணக்கம் மலேசியாவோடு ஒரு கலந்துரையாடலை நடத்தியது.

நேற்று வணக்கம் மலேசியா நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்துசாமியோடு நடந்த இச்சந்திப்பில் இந்திய சமூகத்தின் விவகாரங்களும் அதில் அவர்களின் எதிர்ப்பார்ப்பும் பேசப்பட்டது.குறிப்பாக தற்போது பூதாகரமாக வெடித்துள்ள கோயில் நில விவகாரம் தொடர்பில் அதன் வரலாற்றுப் பின்னணி, தோட்டப்புற மேம்பாடுகள், இந்தியர்களின் உணர்வுகள் பற்றி தியாகராஜன் விளக்கினார்.

இதில் அரசியல் கட்சி உயர்மட்டத் தலைவர்கள் “politically correct” எனும் அரசியல் ஆதாய கணக்கின் அடிப்படையில் அணுகாமல் மலேசியாவின் எதிர்கால இன சமய நல்லிணக்கைத்தை கருத்தில் கொண்டு தங்களின் நிலைப்பாட்டை உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

பரஸ்பர நல்லெண்ணத்துடன் நடந்த இந்த கலந்துரையாடலில் மக்கள் பிரதிநிதி எனும் முறையில் தங்களின் நிலைப்பாட்டை சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் பாஸ் துணை ஆணையருமான Shafie Ngah, செமெஞ்சே சட்டமன்ற உறுப்பினரும் பாஸ் உலாமா மன்ற செயலாருமான Ustad Nushi Mahfodz, உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் பாஸ் துணை ஆணையருமான Hasnizan Harun ஆகியோர் விளக்கினர்.

அவர்களோடு பாஸ் ஆதரவாளர் மன்றத்தின் தகவல் பிரிவுத் தலைவர் Dr Balachandran, சிலாங்கூர் பாஸ் துணை ஆணையர் Sabrino Marsono, சிலாங்கூர் பாஸ் செயலாளர் Zaidy, செமெஞ்சே சட்டமன்ற உறுப்பினரின் அதிகாரி பூபாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மலேசியாவின் தனித்துவமான இன சமய புரிந்துணர்வு எத்தருணத்திலும் கட்டிக்காக்கப்படுவதற்கு அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் தங்கள் பங்கினை ஆக்கரமாக செய்ய வேண்டும் என இக்கலந்துரையாடலின் மையக்கருத்தாக இருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!