
சிலாங்கூர், அக்டோபர் 9 –
நேற்று மதியம், சிலாங்கூர் தஞ்சோங் காராங் அருகே உள்ள சுங்காய் யூவில் நடைபெற்ற கட்டிடப்பணியிட விபத்தில், இந்தோனேசிய தொழிலாளர் ஒருவர் ‘excavator’ இயந்திரம் மோதியதால் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 44 வயது மதிக்கத்தக்க அந்த வெளிநாட்டு தொழிலாளர், தஞ்சோங் காராங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிக்கும்போதே அவரது உயிர் பிரிந்தது.
இச்சம்பவத்தின் போது இயந்திரத்தின் ‘level control’ பகுதியில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த தொழிலாளியை மோதியது என்று குறிப்பிடப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதோடு இந்த வழக்கு “திடீர் மரணம்” என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாரை அணுக வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது