
கோலாலம்பூர், ஜனவரி-6 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, இராணுவக் கொள்முதல் ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய 26 நிறுவனங்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கு, பேராக், மற்றும் பினாங்கில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனைகள், ஒரு மூத்த இராணுவ அதிகாரி மற்றும் அவரது குடும்பத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை குறிவைத்தன.
2023 முதல் பல உயர்மதிப்புள்ள ஒப்பந்தங்களை அந்நிறுவனங்களே திரும்பத் திரும்பப் பெற்றதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து, நிறுவன உரிமையாளர்கள் கைதுச் செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட வாய்ப்புள்ளதாக MACC வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லஞ்சம் கொடுத்தது அல்லது பெற்றது, ஓர் அலுவலகம் அல்லது பதவியை சுய இலாபத்துக்காகப் பயன்படுத்தியது ஆகிய கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.
ஆயுதப்படைத் தலைவராக நியமிக்கப்படவிருந்த இராணுவத் தளபதி தான் ஸ்ரீ Muhammad Hafizuddeain Jantan விசாரணை முடியும் வரை விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



