
வாஷிங்டன், ஜூலை 8 – ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்ட புதிய தேதியைத் தாண்டி பல நாடுகள் மீதான இறக்குமதி வரிகளை அமல்படுத்துவதை தாமதப்படுத்தக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் dpa தெரிவித்துள்ளது. ஜப்பான், தென் கொரியா மற்றும் தென்னாப்பிரிக்கா உட்பட 12 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இறக்குமதி வரி மீதான கட்டணத் திட்டங்கள் குறித்து அனுப்பப்பட்ட கடிதங்கள் இறுதியானவை என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் வேறு சலுகையுடன் வந்தால், நான் அதை விரும்பினால், அமெரிக்கா பரிசீலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
வர்த்தக நட்பு நாடுகள் மீதான அதிக வரிகளை அமல்படுத்தும் தேதியை டிரம்ப் ஜூலை
9 முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதிவரை திங்கட்கிழமையன்று ஒத்திவைத்தார். பேச்சுக்கள் தொடரும் வரை, திட்டமிடப்பட்ட இறக்குமதி கூடுதல் கட்டணங்கள் செயல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான எதிர்கால வர்த்தக உறவு எவ்வாறு கட்டமைக்கப்படும் என்பது உட்பட பல விவரங்கள் இன்னும் தீர்மாணிக்கப்படவில்லை.