Latestமலேசியா

இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்த மலேசியா – ஆசியான் இளைஞர் SDG உச்சநிலை மாநாடு 2025

டாமான்சாரா, ஏப்ரல்-24 , மலேசிய-ஆசியான் இளைஞர் நிலைத்தமைக்கான மேம்பாட்டு இலக்குகள் அல்லது SDG உச்சநிலை மாநாடு 2025, வரும் மே 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 Utama Shopping Centre, The Secret Garden-னில் ‘சேர்க்கை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துதல்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் அம்மாநாட்டில், ‘Way Forward அல்லது ‘முன்னோக்கிச் செல்லுதல்’ என்ற புதிய மாதிரியும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இது SDG-களை முன்னேற்றுவதில் இளைஞர்கள் தலைமையிலான, பொது-தனியார் பங்காளித்துவ ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த உச்சநிலை மாநாடு, நிலைத்தன்மைக்கான மேம்பாட்டு இலக்குகள் மீதான மலேசிய அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு APPGM மற்றும் MySDG அகாடமி ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும்.

இது குறித்து நேற்று ஊடகங்களுக்கு ஒரு விளக்கமளிப்புக்கூட்டம் நடத்தப்பட்டது.

APPGM-SDG செயலகத்தின் தலைவர் டத்தோ Dr டெனிசன் ஜெயசூர்யா அம்மாநாடு குறித்த மேல் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

இது, ஐக்கிய நாடுகளின் நாட்டுக் குழு (UNCT), இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு சிவில் சமூகம், கல்வித்துறை, ஊடகங்கள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களின் ஒத்துழைப்போடு நடைபெறுகிறது.

WWF எனப்படும் உலக வனவிலங்கு நிதியம், Taylor’s பல்கலைக்கழகம், YSS எனப்படும் தன்னார்வ சிஸ்வா அறவாரியம், Heya எனப்படும் மலேசிய உயர் கல்வி சங்கம் மற்றும் நிகழ்வு ஆதரவாளரான 1 Utama உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

“தனித்துவமான இரு தரப்பு முயற்சி” என அழைக்கப்படும் இந்த APPGM-SDG, மலேசிய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

SDG-களை உள்ளூர்மயமாக்க அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இது ஒன்றிணைப்பதாக Dr டெனிசன் கூறினார்.

2020 முதல், 143 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட உள்ளூர் அமைப்புகளை இந்த கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அவை SDG களை வெற்றிகரமாக உள்ளூர்மயமாக்கி, நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும், சமூகம் சார்ந்த தீர்வுகளை செயல்படுத்து வருவதாகவும் அவர் சொன்னார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!