
பினாங்கு, மார்ச்-28-இளையத் தலைமுறைக்கு வியாபாரத்தில் புதிய பாதையைத் திறக்கும் ரவிராஜ் Enricos நிறுவனத்தின் “இளைய வர்த்தகர்கள் அறிமுகம்” திட்டம், நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
3 வாரங்களுக்கு முன் தொடங்கிய இம்முயற்சியில், 83 மாணவர்கள் வெறும் 100 வெள்ளி முதலீட்டில் தங்கள் சொந்த வியாபாரத்தை தொடங்கி ஆதாயம் ஈட்டினர்.
நிறுவனர் கல்யாண சுந்தரம், பயிற்சிப் பட்டறைகள் வாயிலாக சிறுவர்களுக்கு வியாபார யுத்திகள் மற்றும் சம்பாதிக்கும் வழிகளை கற்றுக்கொடுத்து, அந்த 100 ரிங்கிட்டை சிறு முதலீடாக கொடுத்து இதனைத் தொடக்கி வைத்தார்.
பள்ளி விடுமுறையில் மாணவர்கள் பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து, அதன் வழி கிடைத்த வருமானத்தை நேற்றைய நிகழ்வில் மீண்டும் நிறுவனத்திடமே ஒப்படைத்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு சோமு, இளம் வயதிலேயே வியாபார சிந்தனையை விதைத்த Enricos நிறுவனத்துக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
பெற்றோர்களின் ஊக்கமும், சமூக முன்னேற்றத்திற்கான புதிய சிந்தனையும் இந்த முயற்சியில் பிரதிபலித்தது.



