Latestமலேசியா

இவ்வாண்டு மலேசியாவில் 3,161 காசநோய் சம்பவங்கள்; 596 புதியத் தொற்றுகள்

புத்ராஜெயா, பிப்ரவரி-22-இவ்வாண்டின் ஆறாவது வாரம் வரை, மலேசியாவில் 3,161 காசநோய் (TB) சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அவற்றில் 596 புதிய தொற்றுகளாகும் என சுகாதார அமைச்சான KKM கூறியது.

ஆக அதிகமாக 755 சம்பவங்களுடன் சபா முன்னணியில் உள்ளது. அடுத்து சிலாங்கூரில் 596 சம்பவங்களும், சரவாக்கில் 332 சம்பவங்களும் பதிவாகின.

ஜோகூர், கோலாலம்பூர், கெடா, பினாங்கு உள்ளிட்ட மாநிலங்களிலும் கணிசமான எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

காசநோய் காற்று வழியாக பரவுவதால் பாதிக்கப்பட்டவர் இருமல், தும்மல் அல்லது பேசும்போது கிருமி பரவ வாய்ப்புள்ளது என KKM எச்சரித்துள்ளது.

ஆனால், COVID‑19 போல உடனடியாக பரவாது; நீண்ட நேரம், மீண்டும் மீண்டும் தொடர்பு ஏற்பட்டால் தான் அதிக ஆபத்தாகும்.

இந்நிலையில் இந்த ரமலான் நோன்பு காலத்தில் மக்கள் கூடும் சந்தைகள் மற்றும் நிகழ்வுகளில் சுவாசக் கவசம் அணிதல், இருமல் அல்லது தும்மல் வரும்போது அதனை ஒழுங்குடன் கையாளுதல், நல்ல காற்றோட்டம் ஆகியவற்றை கடைபிடிக்குமாறு அமைச்சு வலியுறுத்தியது.

2 வாரங்களுக்கும் மேல் நீடிக்கும் இருமல் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!