Latestமலேசியா

இவ்வாண்டு வேலையின்மை விகிதம் 2.8% ஆக குறையும்

கோலாலம்பூர், பிப் 20 – நாட்டின் வேலையின்மை விகிதம் 2026 ஆம் ஆண்டில் சராசரி 2.8 விழுக்காடாக குறையும் என்பதோடு இது தொடர்ந்து ஊக்கமளிக்கும் மீட்சியைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலையான பொருளாதார மீட்சி மற்றும் உள்நாட்டு சந்தையில் அதிகரித்து வரும் தனியார் முதலீட்டால் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் , எதிர்காலத்தில் தொழிலாளர் சந்தையின் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என TA Securities, நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில், வேலையின்மை விகிதம் 3.0 விழுக்காடாக குறைந்த அளவில் நிலையாக இருந்ததோடு , இது கோவிட் தொற்றுக்குப் பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் அரசாங்கத்தன் பல்வேறு முயற்சிகளின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 3.0 விழுக்காடு அதிகரித்து 17.13 மில்லியன் பேராக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. நாட்டின் பெரும்பாலான முக்கிய பொருளாதாரத் துறைகளில் பரவலான வேலைவாய்ப்பும் உருவானது. . 2023ஆம் ஆண்டு முதல் MYFuture Jobs செயலி வழியாக 620,000 த்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்கள் பெறப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!