
இஸ்தான்புல் , ஏப் 23 – துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் ரெக்டர் கருவியில் 6.2 அளவில் பதிவான வலுவான நிலநடுக்கம் இன்று உலுக்கியது.
அண்மைய சில ஆண்டுகளுக்குப் பின் 16 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட அந்த நகரில் ஏற்பட்ட வலுவான நில நடுக்கம் இதுவாகும் என துருக்கியின் இயற்கை பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் பாஸ்பரஸ் ( Bosphorus ) நீரிணையின் ஐரோப்பிய மற்றும் ஆசிய கரையோரங்களை ஒட்டிய நகரத்திலுள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் கட்டிடங்களிலிருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டனர்.
உள்ளூர் நேரப்படி மதியம் மணி 12.48 அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, இஸ்தான்புல்லுக்கு மேற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிலிவ்ரி ( Silivri ) பகுதியில் 6.92 கிலோமீட்டர் ஆழத்தில் மையமிட்டிருந்தது
Strong earthquake, magnitude, 6.2 shakes, Istanbul, today,