
வாஷிங்டன், அக்டோபர்-9,
அமெரிக்கா முன்வைத்த 20-அம்ச காசா அமைதித் திட்டத்தின் முதல் கட்ட உடன்படிக்கையில், இஸ்ரேல்-ஹமாஸ் இரு தரப்புகளுமே கையெழுத்திட்டுள்ளதாக, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளர்.
இதையடுத்து இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படுவர்; அதே சமயம் இஸ்ரேலும், அதன் படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு எல்லை வரைக்கும் மீட்டுக் கொள்ளும் என ட்ரம்ப் சொன்னார்.
இம்முக்கியச் செய்தியை தனது சமூக ஊடகப் பக்கமான Truth Social-லில் பதிவிட்ட ட்ரம்ப், இது “வலுவான நீடித்த நிலையான அமைதி” என நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்தக் கட்டமாக தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள், மனிதநேய உதவிகள் தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சக்கட்டமாக இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்து டிரம்ப் மத்தியக் கிழக்கிற்கு நேரில் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.
இஸ்ரேலின் அட்டூழியத்தால் காசாவில் இதுவரை 67,000–க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது