
ஈப்போ, அக்டோபர் 2 – ஈப்போ டேசா லாங் இண்டா (Desa Lang Indah) பகுதியில் வசித்து வந்த முதிய தம்பதியினர், இன்று காலை தங்கள் இல்லத்திலேயே உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
மரணமடைந்த அந்த தம்பதியினர் தனக்கு எப்போதும் புலனத்தின் மூலம் தொடர்பு கொண்டிருப்பார்கள் என்றும் இறுதியாக அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனக்கு குறுஞ்செய்தி அனுப்பினர் என்றும் அப்பகுதியிலிருக்கும் பாதுகாப்பு காவலர் ஒருவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் இன்று காலை போலீசார் வந்து அவர்களின் வீடு குறித்து கேட்டபோது இந்தச் சம்பவத்தை அறிந்ததாக மேலும் அவர் கூறினார்.
அந்த தம்பதியினர் எப்போதும் அண்டை அயலாரிடம் நல்ல முறையில் பழகி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக ராஜா பெர்மைசுரி பைனூன் மருத்துவமனைக்கு (Raja Permaisuri Bainun Hospital) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.