
ஈப்போ, மே-18- ஈப்போ, கம்போங் தெபிங் திங்கி, லோரோங் தெபிங் திங்கியில் உள்ள வீட்டொன்றில் ஏற்பட்ட தீயில், 61 வயது முதியவர் உடல் கருகி மாண்டார்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் தகவல் கிடைத்து, 8 வீரர்கள் அடங்கிய தீயணைப்புக் குழு சம்பவ இடம் விரைந்தது.
கடுமையாகப் போராடி தீயை அணைத்த நிலையில், முதியவரின் சடலம் வீட்டின் சமயலறைப் பக்கமாகக் கண்டெடுக்கப்பட்டது.
வீடு தீயில் 90 விழுக்காடு அழிந்துபோனதாக, பேராக் தீயணைப்பு மீட்புத் துறையின் துணைத் தலைமை இயக்குநர் சபாரொட்சி நோர் அஹ்மாட் கூறினார்.
முதியவரின் சடலம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது.