
ஈப்போ, அக்டோபர்-8,
ஈப்போ KTM இரயில் நிலையமருகே நிறுத்தப்பட்டிருந்த 6 கார்களை மோதிய 48 வயது வேன் ஓட்டுநர் போலீஸில் சரணடைந்துள்ளார்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.55 மணியளவில் நிகழ்ந்தது.
வண்டியை திருப்பும் போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை.
வேன் ஓட்டுனர் போதைப்பொருள் உட்கொண்டிருக்கவில்லை என்பதும் சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்தது.
சம்பவ வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், பல கார்களின் பின்புறம் கடுமையாக சேதமடைந்துள்ளதை அதில் காண முடிகிறது.
நேரில் பார்த்த சாட்சிகள் விசாரணைக்கு வந்து உதவுமாறு ஈப்போ போலீஸ் கேட்டுக் கொண்டது.