
காஜாங், டிசம்பர்-5 – காஜாங், தாமான் ஸ்ரீ சௌஜானாவில் பெரியக் கால்வாயில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற 2 சிறுவர்கள் தவறி விழுந்து, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது.
முறையே 12, 14 வயதுடைய அவ்விருவரும் நேற்று மாலை 6.30 மணியளவில் கால்வாய் அருகே பந்து விளையாடிக் கொண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு-மீட்புப் படையினர் முதன்மைக் கால்வாயில் உடனடி தேடுதல் பணியில் இறங்கினர்.
இரவு வரை தேடி மீட்கும் பணியில் அவ்விருவரும் கண்டுபிடிக்கப்படாததால், இன்று காலை அது மீண்டும் தொடருகிறது.



