Latestமலேசியா

உடல்நலத்துக்கு பெரும் கேடு; vape பயன்பாட்டை தடை செய்யும் கோரிக்கைக்கு மலேசிய மருத்துவ சங்கமும் ஆதரவு

கோலாலம்பூர், நவம்பர்-21, Vape புகைப்பதால் ஏற்படும் மோசமான ஆபத்தை கருத்தில் கொண்டு, அதற்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டுமென, மலேசிய மருத்துவ சங்கம் MMA கேட்டுக் கொண்டிருக்கிறது.

மின்னியல் சிகரெட் மற்றும் vape பயன்பாடு முழுவதுமாகத் தடைச் செய்யப்பட வேண்டுமென்ற பஹாங் சுல்தானின் வலியுறுத்தலை MMA ஆமோதித்துள்ளது.

அல்-சுல்தான் அப்துல்லாவின் அறிவுறுத்தலுக்கு அரசாங்கம் செவி சாய்க்குமென நம்புவதாக, MMA தலைவர் டத்தோ Dr கல்விந்தர் சிங் கைரா (Datuk Dr Kalwinder Singh Khaira) தெரிவித்தார்.

மூச்சுத் திணறல், மோசமான நுரையீரல் கோளாறு, மற்ற உடலுறுப்புகளின் செயலிழப்பு என மோசமான விளைவுகளை vape கொண்டு வரக்கூடும்.

அதோடு, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ போதைப் பொருள் பழக்கத்திற்கு இட்டுச் செல்லும் ‘ஆற்றலும்’ vape-பிடம் உள்ளதாக Dr கல்விந்தர் சுட்டிக் காட்டினார்.

மலேசியர்களின் ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்துலாக மாறும் முன்னரே, vape பழக்கம் துடைத்தொழிக்கப்பட வேண்டுமென்றார் அவர்.

இவாலி (Evali) எனப்படும் மின்னியல் சிகரெட், vape புகைப்பதால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு காரணமாக, 2019 முதல் இவ்வாண்டு செப்டம்பர் வரை, மலேசியாவில் 41 சம்பவங்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!