
ரொம்பின், டிசம்பர் 15 – பஹாங் Muadzam Shah அருகேயிருக்கும் Kampung Gadak பகுதியிலுள்ள ஜாலான் குவாந்தான்–செகாமட் சாலையின் 109 வது கிலோ மீட்டரில் இரண்டு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் இரு ஓட்டுநர்கள் தீவிர காயமடைந்தனர்.
இவ்விபத்தினால் லாரியிலிருந்து ரசாயன கசிவு ஏற்பட்டதால், அவ்விடத்தில் பல மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மலாக்காவைச் சார்ந்த 46 வயதுடைய டிரெய்லர் ஓட்டுநருக்கு மார்பு மற்றும் வலது முழங்காலில் காயம் ஏற்பட்ட நிலையில், நெகிரி செம்பிலானைச் சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க மற்றொரு டேங்கர் லாரி ஓட்டுநருக்கு இடது காலில் வெட்டுக் காயம் ஏற்பட்டு, இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திரெங்கானுவிலிருந்து சிரம்பான் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரசாயன டேங்கர் கட்டுப்பாட்டை இழந்து எதிர் வழித்தடத்தில் சென்று, மலாக்காவிலிருந்து குவாந்தான் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிரெய்லருடன் மோதியதென ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent Sharif Shai Sharif தெரிவித்துள்ளார்.
போலீசார் இவ்விபத்து தொடர்பான மேல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் பலத்த மழை காரணமாக ரசாயனம் நீரில் கரைந்ததால் பொதுமக்களுக்கு ஆபத்து இல்லை எனவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்ததுள்ளனர்.



