Latestமலேசியா

உலகில் நிகழும் 100 மரணங்களில் ஒரு தற்கொலை சம்பவம் – WHO

ஜெனீவா, செப்டம்பர் 3 – உலகளவில் ஏற்படும் 100 மரணங்களில் ஒரு தற்கொலை சம்பவம் இடம் பெறுகின்றதென்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு, கிடைக்கப்பெற்ற அண்மைய தரவின்படி, உலகம் முழுவதும் சுமார் 727000 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும், ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னாலும் குறைந்தது 20 தற்கொலை முயற்சிகள் இடம்பெறுகின்றன என WHO தெரிவித்துள்ளது.

தற்கொலை என்பது இன்றும் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு சமூக பின்னணியிலும் வாழும் இளைஞர்களிடையே வெகுவாக பரவி வருகின்றது.

2021ஆம் ஆண்டில், 15 முதல் 29 வயதுடைய சிறுமிகள் மற்றும் பெண்களுக்கிடையில் தற்கொலை இரண்டாவது முக்கியமான காரணமாக இருந்த நிலையில் அதே வயது பிரிவிலுள்ள ஆண்களுக்கு மூன்றாவது முக்கியமான மரணக் காரணமாகவும் பதிவாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!