
ஷா அலாம், மார்ச் 27 – ASF எனப்படும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் பல்வேறு வகைகளைச் சேர்ந்த 14,000 பன்றிகள் சிலாங்கூர் கால்நடை மருத்துவ சேவைகள் துறையால் கருணைக்கொலை செய்யப்பட்டன. அந்த விலகுகள் கார்பன் டி ஆக்சைட் வாயுவைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தப்பட்டு , பரிந்துரைக்கப்பட்ட முறையின்படி கருணைக் கொலை செய்யப்பட்ட பின் பன்றி பண்ணைப் பகுதியில் புதைக்கப்பட்டதாக சிலாங்கூர் கால்நடை மருத்துவ சேவைத்துறையின் இயக்குநர் டாக்டர் ஹசுஷானா காலில் ( Hassuzana Khalil ) தெரிவித்தார்.
நோய்க்குள்ளான பன்றிகளை பண்ணைகளிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடைமுறைக்கு அதிக செலவு மற்றும் கூடுதல் எண்ணிக்கையிலான பணியாளர்களை உள்ளடக்கியதால் , இதர மாநிலங்களின் கால்நடை மருத்துவச் சேவைத்துறைகள் மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள் தலைமையகமான புத்ராஜெயாவின் ஒத்துழைப்புடன் பன்றிகள் அழிக்கப்பட்டதாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் டாக்டர் Hassuzana Khali தெரிவித்தார்.