Latestஉலகம்

ஊழல் விசாரணையில் இஸ்தான்புல் மேயர் கைது; துருக்கியில் வெடித்த மாணவர் போராட்டம்

இஸ்தான்புல், மார்ச்-25- துருக்கித் தலைநகர் இஸ்தான்புல் மேயர் Ekrem Imamoglu ஊழல் புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை கண்டித்து, அங்கு புதிதாக மாணவர் போராட்டம் வெடித்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நேற்று இஸ்தான்புல் சாலைகளை ஆக்கிரமித்தனர்.உள்ளூர் மக்களும் அதில் சேர்ந்துகொண்டதால் மாநகரமே ஸ்தம்பித்துபோனது.

அண்மைய ஆண்டுகளில் துருக்கி கண்ட மாபெரும் சாலை ஆர்ப்பாட்டம் இதுவாகும்.மார்ச் 19-ஆம் தேதி Imamoglu கைதானதும் தொடங்கிய ஆர்ப்பாட்டம் துருக்கியில் உள்ள 81 மாவட்டங்ளில் குறைந்தது 55 மாவட்டங்களுக்குப் பரவியது.

கலகத் தடுப்பு போலீஸாரும் ஆர்ப்பாட்டக்காரர்களும் மோதிக் கொண்டதால் விஷயம் பெரிதாகி அனைத்துலகச் சமூகத்தின் கண்டனத்தையும் பெற்றது.

நேற்று கைதான 43 பேரோடு சேர்த்து இதுவரை 1,130 பேர் கைதுச் செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் சொன்னார்.அவர்களில் ஒரு செய்தியாளரும் புகைப்படக்காரரும் அடங்குவர்.

எதிர்கட்சியைச் சேர்ந்தவரான 53 வயது Imamoglu, அடுத்தப் பொதுத் தேர்தலில் நடப்பு அதிபர் Recep Tayyip Erdogen-னைத் தோற்கடிக்கும் வல்லமைபே பெற்ற ஒரே அரசியல்வாதியாப் பார்க்கப்படுகிறார்.

மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றுத் திகழும் அவரை, திடீரென ஊழல் மற்றும் பயங்கரவாத புகார்களில் சிக்க வைத்து சிறையில் அடைத்திருப்பதால், மக்கள் கொதித்துப் போயிருக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!